- 1616_ம் ஆண்டு வில்லியம் ஹார்வி என்பவர் நமது உடலில் இரத்த ஓட்டம் உள்ளதை கண்டறிந்தார்.
- 1665_ம் ஆண்டு ஒரு நாயின் இரத்தத்தை மற்றொரு நாய்க்கு கொடுக்கப்பட்டு பரிசொதிக்கபட்டது.
- 1667_ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டின் டேனிக்ஷ் என்பவரால் 15 வயது சிறுவனுக்கு மிருகத்தின் இரத்தம் செலுத்தப்பட்டதாக முதல் பதிவு செய்யப்பட்டது.
- 1818_ம் ஆண்டு லண்டன் செயின்ட் தாமக்ஷ் மற்றும் கைக்ஷ் மருத்துவமனையைச் சார்ந்த மரு. ஜேம்சு பிளேன்டல் என்பவர் இரத்தம் செலுத்துவதற்கு உரிய ஒரு கருவியை கண்டறிந்தனர். மேலும் மனித இனத்தின் இரத்தம் மட்டுமே மனித இனத்துக்கு செலுத்தவேண்டும் என்பதை உலகுக்கு தெரிவித்தார்
- 1901_ம் ஆண்டு வியன்னாவைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி கார்ல் லேன்ட்க்ஷ்டீனர் இன்று உலகம் முழுவதும் புழக்கத்தில் உள்ள எ, பி, ஓ இரத்த வகைகளை கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார்.
- 1914_ம் ஆண்டு தானம் செய்த இரத்தம் உறையாமல் இருக்க, பக்க விளைவுகள் இல்லாத ஒரு திரவம் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1936_ம் ஆண்டு தானம் செய்த இரத்தம் கெடாமல் பல நாட்கள் பாதுகாக்கும் முறையை ரசியா மரு. ஆண்ட்ரீபாட்சாவ் கண்டுபிடித்தார்.
- 1937_ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க குடியரசு உலகத்தின் முதல் இரத்த வங்கி முறையை துவக்கியது
- 1939-1945 ஆண்டுகளில் இரண்டாவது உலகயுத்தம் நடந்த காலகட்டத்தில் இந்தியாவில் முதல் இரத்தவங்கி ஆரம்பிக்கப்பட்டது.
Friday, June 26, 2009
இரத்தம் சில தகவல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment