Friday, June 26, 2009

இரத்தம் பரிசோதனைகள்

நாம் ஒவ்வொரு முறையும் இரத்ததானம் செய்கின்றபோதும் நமது இரத்தம் கீழ்கண்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு எந்தவித நோய்க்கிருமிகளும் இல்லாத இரத்தம் நோயாளிக்கு செலுத்தப்படுகிறது.

  • அதே வேளையில், நமது இரத்தம் ஒர் உயிரை காப்பது மட்டுமல்லாது, நமது உடலின் ஆரோக்கிய நிலையையும் நாம் இலவசமாக அறிந்து கொள்ள உதவுகிறது
பரிசோதனைகள்
  • உட‌ல் எடை
  • ஹீமோகுளோபின் அளவு
  • இர‌த்த‌ வ‌கை ம‌ற்றும் இர‌த்த‌ப்பிரிவு
  • இர‌த்த‌ அழுத்தம்
  • ஹெப்ப‌டைட்டிஸ் 'பி' வைரஸ், ஈர‌ல் நோய்க்கிருமி
  • ஹெப்ப‌டைட்டிஸ் 'சி' வைரஸ், ஈர‌ல் நோய்க்கிருமி
  • ஹெச் ஐ வி எய்ட்ஸ் கிருமிம‌லேரியா
  • பைலேரியா என்ற‌ யானைக்கால் வியாதிபால்வினை நோய்க‌ள்

இரத்ததானம்

மனித நேயம் மிக்க உயிர்காக்கும் விலை மதிப்பற்ற‌ இரத்ததானம் பற்றிய சில‌ உண்மைகள்

  • மனித இரத்தத்திற்கு மாற்றுப்பொருள் கண்டுபிடிக்கப்படாததால் இரத்தத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரிது வருகிறது.
  • இரத்ததானம் மன நிறைவைத்தரும் மனித நேயமிக்க ஒர் அருஞ்செயல்.
    இரத்ததானம் எளிதானது, தீங்கில்லாதது.
  • முழு ஆரோக்கியமான 18 முதல் 60 வயது வரை, 45 கிலோ உடல் எடையுள்ள ஆண்களும் பெண்களும் இரத்ததானம் செய்யலாம்.
    நமது உடலின் இரத்த ஓட்டத்திற்கு தேவையானதுபோக, சேமிப்பாக இருக்கும் இரத்தத்திலிருந்துதான் 350 மி.லி. இரத்தம் நாம் தானமாக அளிக்கின்றோம்.
  • உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 8 மி.லி. இரத்தம் வீதம் தானம் அளிப்பது பாதுகாப்பானது. ஆகவே 45 கிலோ எடையுள்ள ஆணும், பெண்ணும் 350 மி.லி. தானமாக அளிக்கலாம்.
  • இரத்ததானம் செய்தபின் நாம் உட்கொள்ளும் பழரசம், காபி போன்ற திரவப் பொருட்கள் நமது உடலின் திரவ நிலையை சமன் செய்கிறது.என‌வே, இர‌த்த‌தான‌ம் செய்த‌பின் ந‌ம‌து அன்றாட‌ப் ப‌ணிக‌ளை எந்தவித‌ சிரம‌மின்றி வ‌ழ‌க்க‌ம்போல் தொட‌ர‌லாம்.
  • தானம் அளித்த இரத்தம் சில நாட்களில் தானாகவே நம் உடலில் ஈடு செய்யப்பட்டு விடும். அதற்கென்று தனியாக சிகிச்சைகளோ அல்லது உணவு உட்கொள்ளும் முறைகளில் மாற்றங்களோ தேவையில்லை.
  • மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இரத்ததானம் அளிக்கலாம்.
  • உணவு உட்கொண்டு 60 நிமிடதிற்குபின் இரத்ததானம் அளிக்கலாம்.
  • இரத்ததானம் செய்யும் முன் இரத்த வங்கி வல்லுனர் உடல் ஆரோக்கியத்தை நன்றாகப் பரிசோத்திது, உடல் நலக்குறைவு இல்லை என்று உறுதி செய்தபின்புதான் நாம் தானம் அளிக்க அனுமதிப்பார்.
  • இரத்ததானம் அளிக்கும் ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் சிரிஞ்சி (Syrinகெ) உபயோகப்படுதப்படும்.
  • 100மி.லி. மனித‌ இரத்தத்தில் இரும்புசத்தும், புரதச்சத்தும் கொண்ட ஹீமோகுளோபின் அளவு 12.6 கிராம் அளவு உள்ளவர்கள் இரத்ததானம் செய்யலாம்.
  • தானமாக நாம் அளிக்கும் இரத்தம், அரசாங்க விதிகளின்படி பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நோய் கிருமிகளில்லாத இரத்தம் ஒவ்வொரு நோயாளியும் பெறுவதை உறுதி செய்கிறது.
  • ஜாதி, மத ஏற்றதாழ்வுகள் இன்றி, இந்தியத் திருநாட்டின் ஒற்றுமையை பேணிக்காக்கும் இரத்ததானத்தில் நாம் நம்மை ஈடுபடுத்தி ஒரு புணிதப்பணியில் பங்குபெறுவொம்.

இரத்தம் சில தகவல்கள்

  • 1616‍‍‍_ம் ஆண்டு வில்லியம் ஹார்வி என்பவர் நமது உடலில் இரத்த ஓட்டம் உள்ள‌தை கண்டறிந்தார்.
  • 1665_ம் ஆண்டு ஒரு நாயின் இரத்தத்தை மற்றொரு நாய்க்கு கொடுக்கப்பட்டு பரிசொதிக்கபட்டது.
  • 1667_ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டின் டேனிக்ஷ் என்பவரால் 15 வயது சிறுவனுக்கு மிருகத்தின் இரத்தம் செலுத்தப்பட்டதாக முதல் பதிவு செய்யப்பட்டது.
  • 1818_ம் ஆண்டு லண்டன் செயின்ட் தாமக்ஷ் மற்றும் கைக்ஷ் மருத்துவமனையைச் சார்ந்த மரு. ஜேம்சு பிளேன்டல் என்பவர் இரத்தம் செலுத்துவதற்கு உரிய ஒரு கருவியை கண்டறிந்தனர். மேலும் மனித இனத்தின் இரத்தம் மட்டுமே மனித இனத்துக்கு செலுத்தவேண்டும் என்பதை உலகுக்கு தெரிவித்தார்
  • 1901_ம் ஆண்டு வியன்னாவைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி கார்ல் லேன்ட்க்ஷ்டீனர் இன்று உலகம் முழுவதும் புழக்கத்தில் உள்ள எ, பி, ஓ இரத்த வகைகளை கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார்.
  • 1914_ம் ஆண்டு தானம் செய்த இரத்தம் உறையாமல் இருக்க, பக்க விளைவுகள் இல்லாத ஒரு திரவம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1936_ம் ஆண்டு தானம் செய்த இரத்தம் கெடாமல் பல நாட்கள் பாதுகாக்கும் முறையை ரசியா மரு. ஆண்ட்ரீபாட்சாவ் கண்டுபிடித்தார்.
  • 1937_ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க குடியரசு உலகத்தின் முதல் இரத்த வங்கி முறையை துவக்கியது
  • 1939‍-1945 ஆண்டுகளில் இரண்டாவது உலகயுத்தம் நடந்த காலகட்டத்தில் இந்தியாவில் முதல் இரத்தவங்கி ஆரம்பிக்கப்பட்டது.

Thursday, June 25, 2009

இரத்தம் சில குறிப்புகள்

இரத்தம்
மிக நுண்ணிய சிவப்பு, வெள்ளை, தட்டை அனுக்கள், பிளாக்ஷ்மா என்று அழைக்கப்படும் பழுப்பு மஞ்சள் திரவத்தில் இரண்டற கலந்து இரத்தக்குழாய்களில் பாய்ந்து செல்லும் திரவம் இரத்தம் ஆகும்
ஒரு துளி இரத்தத்தில் 25 கோடி சிவப்பு அனுக்களும், 4 இலட்சம் வெள்ளை அனுக்களும், 1 கோடி 50 இலட்சம் தட்டை அனுக்களும் உள்ளன

சிவப்பு அனுக்கள்
சிவப்பு எழும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகும் 120 நாட்கள் உயிர் வாழும் சிவப்பு இரத்த அனுக்கள் நுரையீரலிலிருந்து பிரான‌வாயுவை நம் உடல் முழுவதும் எடுத்து சென்று உடலில் உள்ள அனைத்து திசுக்களும் உயிர்வாழ உதவுகிறது.
வெள்ளை அனுக்கள்
நமது உடலின் தற்காப்பு முறையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் உருவாக்கும் திறன் கொண்டது. நோய்க்கிருமிகள் நமது உடலைத் தாக்கினால் வெள்ளை அனுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்க்கிருமிகளை அழிக்கின்றன.

தட்டை அனுக்கள்
ஆபத்து காலங்களில் இரத்த நாளங்கள் சேதமடைந்தாலோ அல்லது துன்டானாலோ அவைகளிலிருந்து இரத்தம் அதிக அளவில் வெளியெறாமல் இரத்தத்தை உறைய வைத்து நம் உயிரைக் காக்கின்றன.

பிளாக்ஷ்மா
சிவப்பு அனுக்கள், வெள்ளை அனுக்கள் மற்றும் தட்டை அனுக்களை உடல் முழுவதும் சுமந்து செல்லும் கடத்தியாக இத்திரவம் செயல்படுகின்ற‌து.

Friday, June 19, 2009

Welcome to All


Under Process We will see shortly